இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய நாடாளுமன்ற மேலவையில் முதல் தமிழ்க் குரல்

  இந்திய நாடாளுமன்ற மேலவையில் முதல் தமிழ்க் குரல் 1969 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 24ஆம் தேதி. இந்திய நாடாளுமன்ற மேலவையில் ஒரு தமிழ்க் குரல் ஒலிக்கிறது. மேலவை உறுப்பினர்கள் பலரும் அந்தக் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். தமிழில் பேசினால் அதை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மொழிபெயர்க்கும் வசதி அப்போது மேலவையில் செய்து தரப்படவில்லை. ஆனாலும் அந்த உறுப்பினர் தமிழிலேயே தன்னுடைய உரையை முழுவதுமாக நிகழ்த்தினார். தனது உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக அவையில் தாக்கல் செய்யப்படும் என்று கூறிவிட்டுத் தன்னுடைய உரையை அவர் தொடர்ந்து நிகழ்த்தினார். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தான் கவிஞர் புதுவைச் சிவம் என்று அழைக்கப்படும் பாவலர் ச. சிவப்பிரகாசம் அவர்கள். அவர் தமிழும், பிரெஞ்சும் பயின்றவர். அதனால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆறு ஆண்டுக் காலத்திலும் முழுக்க முழுக்கத் தமிழிலேயே பேசினார். இந்தியா முழுமையும் பகுத்தறிவுப் புரட்சி தேவை என்பதுதான் அவரது முதல் பேச்சின் பொருளாக இருந்தது. மேலும், ரயில்வே மானியக் கோரிக்கையில் புதுச்சேரி - சென்னை தனி ரயில் பாதை, தனிப்பட்ட அரசியல் பத்திரிகைகளுக்கு...

தமிழோடும் உங்களோடும்

படம்
தமிழோடும் உங்களோடும் https://www.youtube.com/watch?v=55rbsZECJ88