இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘அது’தான் ஆண்மையா? sirukathai

  ‘அது’தான் ஆண்மையா ?       கார்த்திக் கண் கலங்கி நின்று கொண்டிருந்தான் . அப்படி இருப்பதைத் தவிர வேறு வழியில்லை அவனுக்கு .    " என்ன இது , நாம் நம் குடும்பத்திற்காகத் தானே இத்தனை உழைத்தோம் . எல்லா உழைப்பையும் பெற்றுக்கொண்டு இப்படி ஓர் அவப்பெயரா ?" நினைக்க நினைக்கக் கார்த்திக்கிற்கு மனம் ஆறவில்லை .    " நானாகவா இந்த செயற்கைக் கரு முறையை நாடிச் சென்றேன் . எல்லாம் புவனாவின் விருப்பப்படி தானே நடந்தது . அப்போது புவனாவின் பெற்றோர்களும் அதைத்தானே ஆமோதித்தார்கள் ? விரும்பவும் செய்தார்களே !"    பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் - புவனா திருமணம் நடந்தேறியது . காதல் திருமணம்தான் . சாதி குறுக்கிட்டாலும் , இருதரப்புப் பெற்றோரின் சம்மதத்தோடு சீர்திருத்தத் திருமணமாகவே நடைபெற்றது . தம்பதி சமேதரராகத் தனி வீடு பார்த்துக் கொண்டு , இனிமையான இல்லறமாகப் போய்க்கொண்டிருந்தது .     ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தான் பிரச்சனை வந்தது . அதுவும் மாமனார் , மாமியார் வடிவத்...