இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுவைக்கு வந்த ராமசாமி நாயக்கரின் கதை

  புதுவைக்கு வந்த ராமசாமி நாயக்கரின் கதை ( கதை நடந்த காலம் 1922)  "புதுச்சேரில என்னாங்காணும் விசேஷம்" என்று கேட்டார் ராமசாமி நாயக்கர்.  " விசேஷம் ஒண்ணுமில்லே நாயக்கரே! கடலூர் வரை வந்தது தான் வந்தோம், அப்படியே புதுச்சேரிக்குப் போய் நம்ம அரவிந்தரைப் பார்த்துட்டு போகலாமேன்னு தான்"... என்று இழுத்தார் ராமச்சந்திர நாயுடு.  "அரவிந்த கோஷா? அவரை எதுக்குப் பார்க்கணும்? அவர்தான் தீவிரவாதத்திலும் இல்லே, காங்கிரசிலும் இல்லியே" என்றார் நாயக்கர். "இல்ல நாயக்கர் வாள், அவர் காங்கிரசில தீவிரமாக இல்லன்னாலும் பெரிய மகான். ஆன்மிகத்தைப் போதிக்க ஆசிரமம் நிறுவும் முயற்சியில இருக்கிறாரு" என்றார் உடன் வந்த கடலூர் காங்கிரஸ் செயலாளர் குமாரசாமிப் பிள்ளை.  "யோவ் குமாரசாமி! இந்த மகான், ஆசிரமக் கதையெல்லாம் நம்ம கிட்ட வேணாம்யா! நான் காசி வரைக்கும் போய்ப் பார்த்திட்டு வந்தவன்" என்றார் நாயக்கர்.  " சரி சரி நாயக்கரே! அதை விடுங்க. அவரு பழைய காங்கிரஸ்காரர். நீங்க சென்னை மாகாணக் காங்கிரஸ் செயலாளர். நீங்களாவது உங்க வாதத் திறமையைக் காட்டி அவரை மறுபடியும் காங்கிரஸ் கட்சிக்...