இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறள் மாநாடு சிகாகோ "திருக்குறளின் சமயம்"

  திருக்குறள் மாநாடு சிகாகோ "திருக்குறளின் சமயம்"  முனைவர் சிவ இளங்கோ அறங்கூறும் நூல்களுள் சிறந்ததாக 'முப்பால்' என்று மொழியப்பட்ட குறளை அதன் மதிப்பறிந்தோர் உயர்த்துகின்றனர். அப்பெருமை கருதி அடைமொழி தந்து அதனைத் திருக்குறள் என்றும், அதனை இயற்றிய வள்ளுவரைத் திருவள்ளுவர் என்றும் வழங்கி வருகின்றனர். தமிழ் மொழிக்கு வரி வடிவம் உருவான காலத்திற்குப் பின்னர் வள்ளுவர் வாழ்ந்தவர் என்பதால், குறள் எழுதப்பட்ட ஆவணமாகக் கிடைத்து இருக்கிறது. ஆனால் வள்ளுவரின் வாழ்வும், வாழ்க்கை நிகழ்வுகளும், வரலாறும் தொகுக்கப்பட்ட ஓர் ஆவணமாகக் கிடைக்கவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தனிப்பாடல்களும், திருவள்ளுவ மாலையும் சில வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன. ஆனால் அவற்றில் நிறைய பாட மாறுபாடுகளும் காணப்படுகின்றன. திருவள்ளுவர் அல்லது திருக்குறளின் சமயம் எதுவென்று ஆய்வினை எடுத்துக் கொண்டால் அவருடைய பிறப்பில் இருந்து இறப்பு வரை உள்ள எல்லா நிகழ்வுகளும் சமயம் சார்ந்தே கற்பிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இந்த நிலையில் ஒரு முழுமையான வரலாற்று ஆய்வுக்காக நாம் வள்ளுவர் எழுதிய திருக்குறளையேப் பெரிதும் சார்ந...