இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனித வர்க்கத்தின் மறைக்கப்பட்ட கண்கள்

மனித வர்க்கத்தின் மறைக்கப்பட்ட கண்கள்  இறைக் கோட்பாட்டை முன் வைத்தவர்கள் அனைவருமே மனிதர்கள்தான். ஆனால் அப்படிச் சொன்னால் இறைவனை உருவாக்கியவன் மனிதனே என்ற உண்மை எளிதில் விளங்கிவிடும் என்பதனாலேயே இறைக் கோட்பாட்டைச் சொன்னவர்கள் தேவர்களுக்கு இணையான ஞானிகள் (ரிஷிகள்) என்றும், அவர்கள் மொழிந்த கோட்பாடுகள் வேதங்கள் என்றும், இவற்றிற்குக் காலங்கள் இல்லை என்றும், இதன் மொழி தேவனால் மொழியப்பட்டது என்றும் கட்டமைக்கப்பட்டு, அதைக் காலங்காலமாய் யாரும் அறியாமல் காத்து நின்று, இறைநம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் அளவில், அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டும், பரப்பியும் வந்தார்கள், அதில் நன்மையும், அதிகாரமும் பெற்றவர்கள். அதாவது பொருளை (இயற்கையை) மறை (வேதம்) ஆக்கி, அதை மறைபொருளாக ஆக்கி வைத்து விட்டார்கள். இம்மறை பொருளின் உண்மையைத் தேடுவதே மெய்ஞானம் என்றும், அதைத் தேடுவோரே ஞானிகள் என்றும், அது தேடுவோர் அனைவருக்கும் அகப்படாது என்றும், பிறப்பினால் உயர்ந்தோரே அதை அடைய முடியும் என்றும், தேவநெறி, வேதம், சாத்திரம், மனுதர்மம் இவை அனைத்தும் பிரம்மம் என்ற ஒன்றே என்றும், அதற்குத் தாங்கள் மட்டுமே உரியவர்கள் என்றும், தங்களை...

புதுச்சேரி விடுதலையும் சுதந்திரமும்

  புதுச்சேரி விடுதலையும் சுதந்திரமும்  புதுச்சேரி 280 ஆண்டுக் காலமாக பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் வசம் இருந்து வந்தது. 1947 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு, புதுச்சேரியிலும் உந்தப்பட்ட விடுதலை உணர்வினால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள், புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதற்காகப் பிரெஞ்சு இந்திய ஒப்பந்தம் ஒன்று இந்திய அரசுக்கும், பிரான்சு அரசுக்கும் இடையில் கையெழுத்தான பிறகு, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு வெளியேறினர். இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் காரர்கள் வெளியேறிய நாளை இந்திய சுதந்திர தினம் என்று குறிப்பிடுவதைப் போல் புதுச்சேரியை விட்டுப் பிரெஞ்சுக் காரர்கள் வெளியேறிய அந்த நவம்பர் ஒன்றாம் நாள்தான் புதுச்சேரியின் சுதந்திர நாள்.  புதுச்சேரி சுதந்திரத்தின் போது கையெழுத்திடப்பட்ட அந்தப் பிரெஞ்சிந்திய ஒப்பந்தம், இந்தியப் பாராளுமன்றத்திலும், பிரான்சின் பாராளுமன்றத்திலும் ஒப்புதல் பெற்ற பிறகுப் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என்னும் நான்கு புதுச்சேரிப் பகுதிகளும் இந்தியாவுடன் சட்டபூர்வமாக இணைக்கப்பட்டன. அந்த நாள் தான் 1962,...

தீ பரவட்டும்

  தீ பரவட்டும் விட்டன்பர்க் . கிழக்கு ஜெர்மனியின் ஒரு நகரம். விட்டன் பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மார்ட்டின் லூதர், அந்நகர தேவாலயத்தின் மதகுருவாகவும் இருந்தார். கி.பி. 1500 களின் தொடக்கத்தில் கிறித்துவ தேவாலயங்கள் பாவமன்னிப்புச் சீட்டு விற்கும் பஜனை மடங்களாக நிலை பெற்றிருந்தன. எத்தகைய பாவத்திற்கும் பணம் கொடுத்தால் பாவ மன்னிப்பு உண்டு. பாவத்தின் தன்மையைப் பொறுத்துப் பணத்தின் அளவும் மிகும். இறந்துபோய் நரகத்தில் இருப்பவரின் பாவங்கள் கூடப் பணத்தினால் இங்கிருந்தே பாவமன்னிப்புப் பெற்றன. கோயில்கள் கொள்ளைக் கூடாரமாக மாறினால் ஏழைகள் இறைவனிடமிருந்து விலகித் தானே ஆகவேண்டும். இவ்வநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாத மார்ட்டின் லூதர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். தன்னை ஒர் உண்மையான கிறித்தவனாகக் கருதிய மார்ட்டின் லூதர், இறைவனின் கருணை எல்லோருக்கும் பொதுவானதே தவிர, இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்துப் பாவ மன்னிப்புப் பெறுவது, இயேசு கிறித்துவின் போதனைகளைத் திரிப்பதாகும் என்றார். போலியான புனிதங்கள் குறித்துக் கத்தோலிக்கத் தேவாலயங்களில் விவாதிக்கக் கோரிய லூதர், அதற்குத் தேவனின் இடைத்தர...

சமஸ்கிருதம் யாருடைய மொழி ? முனைவர் சிவ. இளங்கோ

படம்
Video link https://youtu.be/55rbsZECJ88

இந்திய நாடாளுமன்ற மேலவையில் முதல் தமிழ்க் குரல்

  இந்திய நாடாளுமன்ற மேலவையில் முதல் தமிழ்க் குரல் 1969 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 24ஆம் தேதி. இந்திய நாடாளுமன்ற மேலவையில் ஒரு தமிழ்க் குரல் ஒலிக்கிறது. மேலவை உறுப்பினர்கள் பலரும் அந்தக் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். தமிழில் பேசினால் அதை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மொழிபெயர்க்கும் வசதி அப்போது மேலவையில் செய்து தரப்படவில்லை. ஆனாலும் அந்த உறுப்பினர் தமிழிலேயே தன்னுடைய உரையை முழுவதுமாக நிகழ்த்தினார். தனது உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக அவையில் தாக்கல் செய்யப்படும் என்று கூறிவிட்டுத் தன்னுடைய உரையை அவர் தொடர்ந்து நிகழ்த்தினார். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தான் கவிஞர் புதுவைச் சிவம் என்று அழைக்கப்படும் பாவலர் ச. சிவப்பிரகாசம் அவர்கள். அவர் தமிழும், பிரெஞ்சும் பயின்றவர். அதனால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆறு ஆண்டுக் காலத்திலும் முழுக்க முழுக்கத் தமிழிலேயே பேசினார். இந்தியா முழுமையும் பகுத்தறிவுப் புரட்சி தேவை என்பதுதான் அவரது முதல் பேச்சின் பொருளாக இருந்தது. மேலும், ரயில்வே மானியக் கோரிக்கையில் புதுச்சேரி - சென்னை தனி ரயில் பாதை, தனிப்பட்ட அரசியல் பத்திரிகைகளுக்கு...

தமிழோடும் உங்களோடும்

படம்
தமிழோடும் உங்களோடும் https://www.youtube.com/watch?v=55rbsZECJ88

தேசியம்: திராவிடம்: தமிழ்; அம்பேத்கர்: பெரியார்: அண்ணா

  தேசியம்: திராவிடம்: தமிழ் அம்பேத்கர்: பெரியார்: அண்ணா அண்ணல் அம்பேத்கரும், அறிஞர் அண்ணாவும் இன்னும் இருபது ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும். உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர். அது நடவாமல் போய் விட்டதில் இந்தியாவிற்குப் பெரும் நட்டம் தான். ஆனாலும், இன்றும் உலக அரங்கில் இந்தியா ஏதாவது ஒரு பொருளில் பாராட்டப்படுமானால், அதன் பின்னணிக் கட்டமைப்பில் அண்ணல் அம்பேத்கர் தான் இருந்து வருகிறார். அதே போல இந்திய அளவில் தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறிய மாநிலமாகப் பேசப்படுவதன் பின்னணியில் அறிஞர் அண்ணாதான் அதன் அடிப்படையாக உள்ளார். அறிஞர் அண்ணாவின் அரசியல் பயணம் நீதிக்கட்சியில் தொடங்கியது. அவருடைய நீதிக்கட்சிப் பயணத்திற்குப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் வரதராஜன், சண்டே அப்சர்வர் இதழாசிரியர் பி. பாலசுப்பிரமணியம், சர். ஏ.  இராமசாமி ஆகியோர் முன்னோடிகளாக இருந்தனர். நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒன்றாகக் கலந்து கொண்ட திருப்பூர் செங்குந்தர் மாநாட்டு மேடையில் ...

சமஸ்கிருதம் இந்திய மொழியா?

சமஸ்கிருதம் யாருடைய மொழி                                           சமஸ்கிரு தம் இந்திய மொழியா?                                                                                                                                          முனைவர் சிவ இளங்கோ இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலம் அந்நிய மொழி என்றால், சமஸ்கிருதமும் அந்நிய மொழிதான். அது இந்திய மொழியே அல்ல. இந்தியாவின் எந்த மாநிலமும் அதைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. சமஸ்கிருதம் உருவாகிய இடமும் தற்போது இந்த...

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

  தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்   ஒரு காலத்தில் ஓங்கிய தெய்வம்  வருங்கா லத்தில் வழிவழி அடிமை. தாய்த் தெய்வமென வாழ்ந்த காலத்தில்,  வாய்த்த கடமை மக்கள் பெருக்கம்.  காலத்தால் தெய்வங்கள் தோற்றுப் போயின. தோற்றவை யெல்லாம் தொண்டு புரிந்தன.  தந்தையர் தெய்வங் களான பின்னர், சிந்தையில் திணிப்பு மக்கட் பேறு.  சமயங்கள் உருவாகிச் சரியும் காலத்தில், சமணமும் சடுதியில் ஏற்க வில்லை. நீண்ட மௌனம் நிலவிய பின்னர்,  பௌத்தக் கதவு பிக்குணிக்குத் திறந்தது.  ஆசீவகமும் அறுவகைச் சமயமும்  அன்னையர் பக்கம் திரும்பிய தில்லை.  எழுபிறப் பென்பது ஆணுக்கு மட்டும்;  இருபிறப் பென்பது அவனுக்கும் மேலே.  வாழும் வகையினில் வக்கிரம் ஏற்றிப்  பாழும் வைதிகம் பாவ யோனி என்றது. விவிலியமும், ஏற்பாடுகளும் ஆணின்  விலாவெ லும்பின் விரிவம் என்றன. இருப்பும், உருவமும் இல்லை என்றே இரண்டையும் மறைத்தது இசுலாம் மார்க்கம்.  யூத மதத்தின் புனிதச் சுவர்களில்  பூதமும் உண்டு; பூவையர் இல்லை. வகாபியம் கண்களை மட்டும் விட்டது. பெண்ணைத் தொட்ட தத்துவ ஜென்களைக் கன்பூ சியசும்...

புதுவைக்கு வந்த ராமசாமி நாயக்கரின் கதை

  புதுவைக்கு வந்த ராமசாமி நாயக்கரின் கதை ( கதை நடந்த காலம் 1922)  "புதுச்சேரில என்னாங்காணும் விசேஷம்" என்று கேட்டார் ராமசாமி நாயக்கர்.  " விசேஷம் ஒண்ணுமில்லே நாயக்கரே! கடலூர் வரை வந்தது தான் வந்தோம், அப்படியே புதுச்சேரிக்குப் போய் நம்ம அரவிந்தரைப் பார்த்துட்டு போகலாமேன்னு தான்"... என்று இழுத்தார் ராமச்சந்திர நாயுடு.  "அரவிந்த கோஷா? அவரை எதுக்குப் பார்க்கணும்? அவர்தான் தீவிரவாதத்திலும் இல்லே, காங்கிரசிலும் இல்லியே" என்றார் நாயக்கர். "இல்ல நாயக்கர் வாள், அவர் காங்கிரசில தீவிரமாக இல்லன்னாலும் பெரிய மகான். ஆன்மிகத்தைப் போதிக்க ஆசிரமம் நிறுவும் முயற்சியில இருக்கிறாரு" என்றார் உடன் வந்த கடலூர் காங்கிரஸ் செயலாளர் குமாரசாமிப் பிள்ளை.  "யோவ் குமாரசாமி! இந்த மகான், ஆசிரமக் கதையெல்லாம் நம்ம கிட்ட வேணாம்யா! நான் காசி வரைக்கும் போய்ப் பார்த்திட்டு வந்தவன்" என்றார் நாயக்கர்.  " சரி சரி நாயக்கரே! அதை விடுங்க. அவரு பழைய காங்கிரஸ்காரர். நீங்க சென்னை மாகாணக் காங்கிரஸ் செயலாளர். நீங்களாவது உங்க வாதத் திறமையைக் காட்டி அவரை மறுபடியும் காங்கிரஸ் கட்சிக்...