இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆரியனாகப் பிறந்திருந்தால்...

ஆரியனாகப் பிறந்திருந்தால் ...                   நீ அடிமையாக இருந்திருப்பாய்                 என் தாசி மகனாகவும் ஆகியிருப்பாய்                 அதையும் நீயே சொல்லிக் கொள்வாய்                 அதற்காகப் புளகாங்கிதமும் அடைந்திடுவாய் !                                 எல்லாவற்றையும் கட்டி முடித்து                 என்னை நடுவில் குடியேற்றி                 வெளியில் நி...
  " புதுச்சேரி வளர்த்த தமிழ் "   -முனைவர் சிவ இளங்கோ     முதல் , இடை , கடை என்று முச்சங்கம் கண்டு வளர்ந்தது தமிழ் . " வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து " எழுத்து , சொல் , பொருள் இலக்கண வழி அகத்திணை மரபுகளையும் , புறத்திணை மரபுகளையும் வாழ்வியலாகக் கொண்டவர்கள் தமிழ் மக்கள் . குறிஞ்சி , பாலை , முல்லை , மருதம் , நெய்தல் என ஐந்திணைகளில் பொருந்தி வாழ்ந்த இயற்கை வாழ்வினைக் கொண்டிருந்தவர்கள் . அந் நிலப்பரப்பில் மருதம் , நெய்தல் ஆகிய திணைகளைக் கொண்ட பகுதியாகப் புதுச்சேரி , சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தமிழோடு இணைந்தும் , பிணைந்தும் உள்ள வாழ்வியலைக் கொண்டது .    வரலாறு :    சங்ககாலத்தில் நல்லியக்கோடன் என்னும் மன்னன் ஆண்ட ஒய்மா நாட்டின் பகுதியாகப் புதுச்சேரி இருந்தது . இக்காலத்திற்குப் பிறகு தொண்டை மண்டிலமாக அறியப்பட்ட புதுச்சேரி தொடர்ந்து பல்லவர் , சோழர் , பாண்டியர் , விஜயநகர மன்னர்கள் , பீஜப்பூர் சுல்தான் ஆகிய மன்னராட்சிகளுக்கு உட்பட்டுப் பின்னர் பதினா...