அவுலவுலே… அவுலவுலே…
அவுலவுலே … அவுலவுலே … தின / வார இதழ் : தினமணி கதைத்தொகுப்பு : குடும்பம் கதைப்பதிவு : November 18, 2015 பார்வையிட்டோர் : 14,558 “” அவுலவுலே …” “” அவுலவுலே …..” அந்த வாரத்து இதழில் ஆயன் கடிதங்கள் நூல் பற்றிய மதிப்புரையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரனின் கவனத்தை அந்தக் குரல் சற்றே இழுத்தது . இருந்தாலும் படிக்கும் விஷயத்தில் இருந்த ஈர்ப்பினால் சந்திரன் மீண்டும் படிப்பில் ஆழ்ந்து போனான் . கொஞ்ச நேரம் சென்றிருக்கும் . “” அவுலவுலே ……” சந்திரன் மீண்டும் நனவுலகு வந்தான் . படிப்பதை சற்று நிறுத்திக் கொண்டு தன்னைத் திசை திருப்பிய அந்தக் குரலுக்காகக் காத்திருந்தான் . ஒவ்வொரு நாளும் அந்தத் தெருவில் எத்தனையோ பேர் எதையெதையோ கூவிக் கூவி விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள் . சிலர் கூவுவார்கள் , சிலர் கத்துவார்கள் , சிலர் ராகம் போட்டு இசைப்பார்கள் , சிலர் மொணமொணப்பார்கள் . சிலரின் வார்த்தைகள் புரியும் . ஒரு சிலர் என்ன விற்கிறார்கள் என்...