தேசியம்: திராவிடம்: தமிழ்; அம்பேத்கர்: பெரியார்: அண்ணா
தேசியம்: திராவிடம்: தமிழ் அம்பேத்கர்: பெரியார்: அண்ணா அண்ணல் அம்பேத்கரும், அறிஞர் அண்ணாவும் இன்னும் இருபது ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும். உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர். அது நடவாமல் போய் விட்டதில் இந்தியாவிற்குப் பெரும் நட்டம் தான். ஆனாலும், இன்றும் உலக அரங்கில் இந்தியா ஏதாவது ஒரு பொருளில் பாராட்டப்படுமானால், அதன் பின்னணிக் கட்டமைப்பில் அண்ணல் அம்பேத்கர் தான் இருந்து வருகிறார். அதே போல இந்திய அளவில் தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறிய மாநிலமாகப் பேசப்படுவதன் பின்னணியில் அறிஞர் அண்ணாதான் அதன் அடிப்படையாக உள்ளார். அறிஞர் அண்ணாவின் அரசியல் பயணம் நீதிக்கட்சியில் தொடங்கியது. அவருடைய நீதிக்கட்சிப் பயணத்திற்குப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் வரதராஜன், சண்டே அப்சர்வர் இதழாசிரியர் பி. பாலசுப்பிரமணியம், சர். ஏ. இராமசாமி ஆகியோர் முன்னோடிகளாக இருந்தனர். நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒன்றாகக் கலந்து கொண்ட திருப்பூர் செங்குந்தர் மாநாட்டு மேடையில் ...