ஆரியனாகப் பிறந்திருந்தால்...
ஆரியனாகப் பிறந்திருந்தால்...
நீ அடிமையாக இருந்திருப்பாய்
என் தாசி மகனாகவும் ஆகியிருப்பாய்
அதையும் நீயே சொல்லிக் கொள்வாய்
அதற்காகப் புளகாங்கிதமும் அடைந்திடுவாய்!
எல்லாவற்றையும் கட்டி முடித்து
என்னை
நடுவில் குடியேற்றி
வெளியில் நின்று வணங்கிடுவாய்
தூக்கிப் போட்டால் பொறுக்கிக்கொள்வாய்
கருவறைச் சிறுநீர் காயுமுன் நெற்றியில்!
கன்றானால் என்ன மாடானால் என்ன
இனாமாய் வந்ததை யெல்லாம்
நிலாவில் கட்டிவைக்க
கணவாய் தாண்டியவனுக்குக்
கற்றா
கொடுக்க வேண்டும்!
மதிகெட்ட உன் மன்னனெல்லாம்
மண்டியிட்ட காலமுண்டு மயங்கிப்போய்!
செந்தோலைக் காணாமல், சுராபானம் அருந்தாமல்,
எந்நாளும் கழிக்காத எருமைத்தோல் மன்னர்கள்!
குதிரைக்குக் கேட்டாலே கோமளங்களைத் தருவார்
கோடிப் பொன்னும், கோட்டை, யானையொடு
ஓடிவந்திரந்து ஊராயிரம் எழுதிவைப்பான்!
தேடித் தாள் பணிந்து தினமும் எனை வணங்கி
நீச மொழி பேசி நீறு பூசிக்கொள்வாய்!
மந்திரம் சொன்னால் மழையை நம்புவாய்
எந்திரம், கட்டுவித்தை, எக்கியம் என்றே
தேவ மொழி பேச பத்தினியைக் குனியவைப்பாய்
பதைக்காமல் பார்த்துக் கொண்டே
பல்லிளித்துப் பலகாலம் வாழ்ந்திருப்பாய்!
ஆரியத்தின் வீரியமெல்லாம் உன் மரபின்
அடிகாண விட்டவனே!
பக்தியை விடாதே, பகல் வேடம் நம்பு!
புத்தியில்லாப் பிண்டமாய் நீ
புண்ணியங்களைத் தேடிக்கொண்டிரு!
தாகமெடுத்தால் என்னிடம் வா
வற்றிய பாலைவனம் தாண்டி வந்தவனிடம்
வற்றாத தண்ணீர் உண்டு.
காலாலும் தருவேன், கமண்டலத்தாலும் தருவேன்!
வேண்டாத நிலையுனக்கு வரவே வராது; நீ
தாண்டாத வரை என் தலையை!
முனைவர் சிவ.இளங்கோ,
புதுச்சேரி
கருத்துகள்