சமஸ்கிருதம் இந்திய மொழியா?


சமஸ்கிருதம் யாருடைய மொழி

                                 சமஸ்கிரு தம் இந்திய மொழியா? 


                                                                                                             முனைவர் சிவ இளங்கோ

இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலம் அந்நிய மொழி என்றால், சமஸ்கிருதமும் அந்நிய மொழிதான். அது இந்திய மொழியே அல்ல. இந்தியாவின் எந்த மாநிலமும் அதைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. சமஸ்கிருதம் உருவாகிய இடமும் தற்போது இந்தியாவில் இல்லை. பெர்சியா எனப்படும் பாரசீக மொழியின் சகோதரி மொழியாக சமஸ்கிருதத்தை மொழியியல் வல்லுனர்கள் தற்போது ஆய்வு வழித் தெரிவிக்கின்றனர். சிந்துவெளிக் காலத்தில் கூட சமஸ்கிருதம் உருவாகவில்லை. சுமேரிய நாகரிகம் உருவான மத்திய கிழக்கு நாடுகளின் பாலஸ்தீனம் முதல் சிந்துவெளி வரை இருக்கக்கூடிய மிகப்பெரிய பகுதிகளில், அரேபிய மொழியும், அதைச் சார்ந்த வேறு சில மொழிகளும் தான் பேசப்பட்டு வந்தன. அப்போது பலுசிஸ்தான், குர்திஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் சில நாடோடிக் கூட்டங்கள் பேசிய மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. அந்தப் பழைய சமஸ்கிருதம் இன்றும் அவ்வட்டாரங்களில் சிலரால் பேசப்பட்டும் வருகிறது. அப்போது சிந்துவெளித் தீரங்களில் திராவிட மொழிகள் பல பேசப்பட்டு வந்தன. அவற்றை 'மெலுகா' என்று அரேபிய மொழியில் குறிப்பிட்டனர். சிந்து நதியை ஒட்டி உள்நுழைந்த புதிய ஆரியக் கூட்டமொன்றின் பேச்சு மொழியாகச் சமஸ்கிருதம் உருவாகிக் கொண்டிருந்தது. அவர்கள் தாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து, கடந்து வந்த வழிகளில் பேசிய மக்களின் மொழிகளைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு வந்திருந்தனர். நாடோடிகளாக வந்தவர்கள், சிந்துநதித் தீரங்களில் நிரந்தரமாகத் தங்கி விட்ட பிறகு தங்கள் மொழியைச் சிறிது சிறிதாக வளப்படுத்திக் கொண்டனர். அது கூடச் சிந்துவெளி நாகரிக இறுதிக் கால மக்களின் பேச்சுகளையும், பாடல்களையும், வேண்டுதல்களையும் அடியொற்றி அமைத்துக் கொண்டதுதான். அதுவே ஆதி சமஸ்கிருதம். அதில் பல திராவிட மொழிச் சொற்கள் உள்ளன. (வேதங்களில் உள்ள திராவிட மொழி வேர்ச் சொற்களைப் பற்றித் தன் ஆய்வில் ஐராவதம் மகாதேவன் கூறியுள்ளார்). சிந்துவெளி காலத்திலேயே சிந்துவெளி மொழிக்கு எழுத்து உருவாகிவிட்டாலும், சமஸ்கிருதத்திற்கு எழுத்து முறை உருவாகவில்லை. பேச்சு வழக்கிலேயே இருந்த சமஸ்கிருதத்தில் மிகமிகப் பிற்காலத்தில்தான் எழுத்துமுறை கொண்டுவரப்பட்டது. முதலில் எழுதிய சமஸ்கிருத எழுத்துக்கள் இப்போதைய சமஸ்கிருத எழுத்தாக இல்லை. சமஸ்கிருதம் தனது எழுத்து வடிவங்களுக்கு முழுக்க முழுக்கப் பாலி மொழியைச் சார்ந்திருந்தது. பாலி மொழி பிராகிருதத்தைச் சார்ந்திருந்தது. பிராகிருத மொழியும் சிந்துவெளி மொழியின் அடிப்படையில், தமிழ் எழுத்து முறையைச் சார்ந்து இருந்தது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகரின் கல்வெட்டுகளில் இருந்த எழுத்துரு, அசோகன் பிராமியாக அறியப்படுகிறது. அதே நேரம் அசோகன் பிராமி எழுத்து, தமிழ் பிராமி என்று சொல்லக்கூடிய தமிழி எழுத்துருவை அடிப்படையாகக் கொண்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டு எழுத்துகள், இப்போது கீழடியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலத்தின் பானை ஓடுகளில் காணப் படுகின்றன. கீழடியின் எழுத்துப்  பொறிப்புகள் மற்றும் கீறல்கள் அனைத்தும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும், ஆதிச்சநல்லூரில் கிடைத்த கீறல்கள் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் கொண்டு செல்கின்றன. தமிழி எழுத்துருதான் இந்தியாவின் முதல் எழுத்துருவாகத் தொல்லியல் வழியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்நிய மொழியும், காலக் கணிப்பில் பின்னோக்கி உளளதும், இன்றைக்கு மொத்தமாக 28000 பேர் மட்டுமே பேசும் மொழியான சமஸ்கிருதம், இந்திய மொழியாக, 130 கோடிப் பேர் மீது திணிக்கப்படுகிறது. 







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்"