நான் வெறுத்த நரசிம்மவதாரமாய்......................


நான் வெறுத்த நரசிம்ம வதாரமாய்


                                                                                 -முனைவர் சிவ. இளங்கோ 
  


மகாவீரை மனதில் நிறுத்திய பின்னர்
நிர்வாணத் தத்துவம் நிறைவெனப் புரிந்தது
புத்தனைப் படித்துப் புரிந்த பின்னர்
சாந்தமும் சரணமும் சரியெனப் பட்டது
இயேசுவின் வரலாற்றுச் சிக்கலையும் தாண்டி
தியாகம் மட்டுமே தீபமாய் நின்றது
நாயகத்தின் மார்க்கம் தெரிந்து பின்னர்
இந்து முஸ்லிம் பாய்பாய் வெறுப்ப கன்றது
பணியா காந்தியின் நிஜத்தை உணர்ந்து
அகிம்சையை மனம் அரப்போராய் ஏற்றது
பிறவி பேதத்தில் புரண்டு எழுந்து
பீமாராவ் சொன்ன அரசியல் புரிந்தது
ஆரியம் திராவிடம் வேரைச் சொல்லியும்
பொறுமை காத்தது பெரியாரின் தந்திரம்
தமிழ் இனத்தின் உச்சியைக் குலுக்கி
மாந்த நேயமும் சொன்னார் அண்ணா
ஆதியில் திராவிடனாய்
அடுத்ததில் தமிழனாய்
தற்கால இந்தியனாய்
சமாதானமாய் வாழ்ந்து
சர்வாதி காரத்துடன் கைகுலுக்கும்
சதிகாரத் துரோகம் சங்கை அருக்கையில்
எனக்குள்ளும் வெடிக்கும் எண்ணக் குமிழ்கள்
சிங்கள இனத்தையே சிதைத்துப் பூண்டுடன்
நசுக்கிப் பிழிந்து கருவறை கசக்கி
நான் வெறுத்த நரசிம்ம வதாரமாய்.................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்"

சமஸ்கிருதம் இந்திய மொழியா?