தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ஒரு காலத்தில் ஓங்கிய தெய்வம் வருங்கா லத்தில் வழிவழி அடிமை. தாய்த் தெய்வமென வாழ்ந்த காலத்தில், வாய்த்த கடமை மக்கள் பெருக்கம். காலத்தால் தெய்வங்கள் தோற்றுப் போயின. தோற்றவை யெல்லாம் தொண்டு புரிந்தன. தந்தையர் தெய்வங் களான பின்னர், சிந்தையில் திணிப்பு மக்கட் பேறு. சமயங்கள் உருவாகிச் சரியும் காலத்தில், சமணமும் சடுதியில் ஏற்க வில்லை. நீண்ட மௌனம் நிலவிய பின்னர், பௌத்தக் கதவு பிக்குணிக்குத் திறந்தது. ஆசீவகமும் அறுவகைச் சமயமும் அன்னையர் பக்கம் திரும்பிய தில்லை. எழுபிறப் பென்பது ஆணுக்கு மட்டும்; இருபிறப் பென்பது அவனுக்கும் மேலே. வாழும் வகையினில் வக்கிரம் ஏற்றிப் பாழும் வைதிகம் பாவ யோனி என்றது. விவிலியமும், ஏற்பாடுகளும் ஆணின் விலாவெ லும்பின் விரிவம் என்றன. இருப்பும், உருவமும் இல்லை என்றே இரண்டையும் மறைத்தது இசுலாம் மார்க்கம். யூத மதத்தின் புனிதச் சுவர்களில் பூதமும் உண்டு; பூவையர் இல்லை. வகாபியம் கண்களை மட்டும் விட்டது. பெண்ணைத் தொட்ட தத்துவ ஜென்களைக் கன்பூ சியசும்...
கருத்துகள்